வேலகவுண்டம்பட்டியில் கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை

வேலகவுண்டம்பட்டியில் கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

பரமத்திவேலூர்:

வேலகவுண்டம்பட்டியில் உள்ள பள்ளி சாலை பகுதியை சேர்ந்தவர் குமார். இவருடைய மகன் சிவசங்கர் (வயது 21). கட்டிட மேஸ்திரி. இவர் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததால் பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சிவசங்கர் நேற்று மதியம் வீட்டில் உள்ள விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த பெற்றோர் மகன் தூக்குப்போட்டு இறந்த நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சிவசங்கரின் உடலை கைப்பற்றி நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com