வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் தற்கொலை

வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

ஆலந்தூர்:

சென்னை வேளச்சேரி வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 50). திருமணமானவர். சிவில் என்ஜினீயரான இவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், 2 ஆண்டுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு திரும்பி வந்தார். ஆனால் இங்கு அவருக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மிகவும் சிரமப்பட்ட அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் ரவிச்சந்திரன் தனது மனைவி குழந்தைகளுடன் தேனாம்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதையடுத்து திரும்பி வந்த ரவிச்சந்திரன் மனஉளைச்சலில் வீட்டில் இருந்த போது திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com