ஒரத்தநாடு அருகே வாகனம் மோதி காவலாளி பலி

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே வாகனம் மோதியதில் காவலாளி உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து
விபத்து
Published on

ஒரத்தநாடு:

ஒரத்தநாடு அருகே உள்ள புலவன்காடு அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் பழனி செல்வம் (வயது 46). இவர் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் ஜவுளி கடையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு புலவன்காடு பேருந்து நிலையத்தில் இறங்கி வீட்டிற்கு நடந்து வந்துகொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் நீண்டநேரம் உயிருக்கு போராடி சாலையில் கிடந்துள்ளார்.

தகவல் அறிந்து வந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பாப்பநாடு போலீசாருக்கும், ஆம்புலசுக்கும் தகவல் கொடுத்துள்ளனர். 3 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் யாரும் அங்கு வராததால் பழனிச்செல்வம் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

ஆத்திரமடைந்த உறவினர்கள், பொதுமக்கள் தஞ்சை- பட்டுக்கோட்டை சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து விபத்தில் பலியான பழனிசெல்வம் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மறியலால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com