சங்ககிரி அருகே வாகனம் மோதி கூலித்தொழிலாளி பலி

சங்ககிரி அருகே நடந்து சென்று கொண்டிருந்த கூலித்தொழிலாளி மீது வாகனம் மோதியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து
விபத்து
Published on

சங்ககிரி:

திருச்சி மாவட்டம் துறையூர் பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பிச்சை (வயது 53). கூலித்தொழிலாளி. இவர் நேற்று மதியம் சங்ககிரி அருகே ரோடு ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 

அவரை சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். 

இது குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com