பழனி அருகே வாகனம் மோதி காவலாளி பலி

பழனி அருகே சாலையை கடக்க முயன்ற காவலாளி மீது வாகனம் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து
விபத்து
Published on

நெய்க்காரப்பட்டி:

கீரனூர் அருகே உள்ள மேல்கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 60). இவர், பழனியை அடுத்த புஷ்பத்தூர் கூட்டுறவு வங்கியில் இரவுநேர காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் அப்பகுதியில் உள்ள பழனி-உடுமலைபேட்டை சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று பரமசிவம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பரமசிவம் உயிருக்கு போராடினார்.

இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார். இதுகுறித்து சாமிநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com