வடமதுரை அருகே வாகனம் மோதி பெயிண்டர் பலி

வடமதுரை அருகே நடந்து சென்று கொண்டிருந்த பெயிண்டர் மீது வாகனம் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து
விபத்து
Published on

வடமதுரை:

திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டியை சேர்ந்தவர் ராஜ் (வயது 30). பெயிண்டர். இவருக்கு இன்னும் திரு மணமாகவில்லை. இந்தநிலையில் நேற்று ராஜ் வேலை தொடர்பாக வடமதுரையை அடுத்த வெள்ளபொம்மன் பட்டி பிரிவு பகுதிக்கு சென்றார். அங்குள்ள முருகன் கோவில் அருகே அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் ஒன்று ராஜ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. 

இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com