நாமக்கல்லில் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை - நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு

நாமக்கல் நகரில் கொரோனா பரவலை தடுக்க நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நாமக்கல்லில் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை - நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு
நாமக்கல்லில் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை - நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு
Published on

நாமக்கல்:

நாமக்கல் நகரில் கொரோனா பரவலை தடுக்க நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக காய்கறிகளை 39 வார்டுகளிலும் வீதி, வீதியாக சென்று வாகனங்கள் மூலம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த வாகனங்களை நேற்று நகராட்சி ஆணையாளர் பொன்னம்பலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் நகராட்சி சுகாதார அலுவலர் சுகவனம் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இனிவரும் காலங்களில் மளிகை பொருட்களையும் வாகனம் மூலம் டோர் டெலிவரி செய்ய நகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com