வீரவநல்லூரில் செல்போன் வாங்கி தராததால் வாலிபர் தற்கொலை

வீரவநல்லூரில் செல்போன் வாங்கி தராததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை
தற்கொலை
Published on

நெல்லை:

வீரவநல்லூர் பாரதி நகரை சேர்ந்தவர் ஆத்தி. இவரது மகன் வெங்கடேஷ் (வயது 19). இவர் படிப்பை பாதியில் விட்டுவிட்டு வீரவநல்லூர் பேரூராட்சியில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

கடந்த சில நாட்களாக வெங்கடேஷ் தனது பெற்றோரிடம் செல்போன் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. அதற்கு அவரது பெற்றோர் மறுத்துவிட்டனர். இதனால் மனவேதனை அடைந்த வெங்கடேஷ் இன்று அதிகாலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com