

வேடசந்தூர்:
வேடசந்தூர் காந்திநகரை சேர்ந்தவர் சின்னக்காளை (வயது 47). இவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்தார். நேற்று
முன்தினம் இரவு இவர், வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார். திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில்
விட்டல்நாயக்கன்பட்டி அருகே வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி, சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி
விபத்துக்குள்ளானது.
அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த சின்னக்காளை உயிருக்கு போராடினார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.