வாணியம்பாடியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை - கல்லூரி மாணவர் கைது

வாணியம்பாடியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
கைது
கைது
Published on

வாணியம்பாடி:

வாணியம்பாடி டொக்கு தெருவைச் சேர்ந்தவர் இஸ்மாயில் இவருடைய மகள் ஜாக்கியா (வயது 29).

இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 5 நாட்களுக்கு பிறகு அவரது உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இறந்து போன பெண் மர்மமான முறையில் இறந்ததாக அவரது பெற்றோர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் இளம்பெண் தற்கொலைக்கு காரணமாக இருந்த கல்லூரி மாணவர் முகமது நிப்ராஸ் சையான் (20) என்பவரை டவுன் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com