சேர்ந்தமரம் அருகே வேன் மோதி விவசாயி பலி

சேர்ந்தமரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து
விபத்து
Published on

சுரண்டை:

சேர்ந்தமரம் அருகே உள்ள வலங்கல்புலிசமுத்திரம் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சண்முகையா (வயது 53). விவசாயியான இவர் நேற்று காலை சேர்ந்தமரத்திற்கு சென்று விட்டு தனது மோட்டார் சைக்கிளில் மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தார். 

பசும்பொன் நகர் அருகே வந்த போது, எதிர்பாராதவிதமாக எதிரே வந்த வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட சண்முகையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சேர்ந்தமரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சண்முகையாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இதுதொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து, வேன் டிரைவரான மயிலப்பபுரத்தை சேர்ந்த தினகரன் என்பவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com