வீரவநல்லூரில் வேன் மோதி முதியவர் பலி

வீரவநல்லூரில் நடந்து சென்ற முதியவர் மீது வேன் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
விபத்து
விபத்து
Published on

சேரன்மாதேவி:

வீரவநல்லூர் வடக்கு அய்யனார் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60). இவர் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் நேற்று இரவில் வீரவநல்லூர் போலீஸ் நிலையம் அருகில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற வேன் எதிர்பாராதவிதமாக ஆறுமுகத்தின் மீது மோதியது. 

இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே வீரவநல்லூர் போலீசார் விரைந்து சென்று, இறந்த ஆறுமுகத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com