வாடிப்பட்டி அருகே விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி

வாடிப்பட்டி அருகே விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

வாடிப்பட்டி:

வாடிப்பட்டி அருகே கட்டக்குளம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கபிலன் (வயது 35). இவர் மதுரை கோச்சடையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். நேற்றுமுன்தினம் இரவு 1 மணிக்கு வேலை முடிந்துவிட்டு மதுரையிலிருந்து கட்டக்குளத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சமயநல்லூர் ெரயில்வே மேம்பாலத்தில் கீழ்புறம் மதுரை-திண்டுக்கல் சாலையில் திரும்பியபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கபிலன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இவருக்கு திருமணமாகி ரம்யா(23) என்ற மனைவி உள்ளார். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com