வடமதுரை அருகே சூதாடிய 15 பேர் கைது

வடமதுரை அருகே சூதாடிய 15 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன், சந்திரன் தலைமையிலான போலீசார் நேற்று பாடியூர் மற்றும் அத்திமரத்துப்பட்டி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய 15 பேரை போலீசார் பிடித்தனர். விசாரணையில் அவர்கள், என்.பாறைப்பட்டியை சேர்ந்த சின்னசாமி (வயது 31), சர்க்கரைராஜா (56), ஆத்துமரத்துப்பட்டியை சேர்ந்த லட்சுமணன் (54), காளியப்பன் (62), புதுப்பட்டியை சேர்ந்த முருகன் (54), சதீஷ்குமார் (30), வடிவேல் (72) உள்பட 15 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 15 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 8 மோட்டார் சைக்கிள்கள், ரூ.1,500 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com