வடமதுரை அருகே 2 கன்றுகளை ஈன்ற பசு

வடமதுரை அருகே 2 கன்றுகளை ஈன்ற பசுமாட்டை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
2 கன்றுகளை ஈன்ற பசு.
2 கன்றுகளை ஈன்ற பசு.
Published on

வடமதுரை:

வடமதுரை அருகே உள்ள புதுப்பாளையத்தை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 52). விவசாயி. இவர் தனது வீட்டில் 50 பசுமாடுகளை வளர்த்து வருகிறார். அவர் வளர்த்த பசுமாடு ஒன்று சினையாக இருந்தது. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அந்த பசுமாடு திடீரென்று கத்தும் சத்தம் கேட்டது. உடனே பொன்னுச்சாமி மாட்டின் அருகே சென்று பார்த்தார். அப்போது அந்த பசுமாடு 2 கன்றுகளை ஈன்றிருந்தது. அதில் ஒரு கன்று காளையாகவும், மற்றொரு கன்று பசுவாகவும் இருந்தது. இதனை கண்ட பொன்னுச்சாமி மகிழ்ச்சியடைந்தார். பொதுவாக பசுமாடு ஒரு நேரத்தில் ஒரு கன்று மட்டுமே ஈனும். பொன்னுசாமியின் பசுமாடு 2 கன்றுகளை ஈன்றுள்ளதால், அவற்றை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com