வடமதுரை அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி

வடமதுரை அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

வடமதுரை:

வடமதுரை அருகே உள்ள வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் சவடம்மாள் (வயது 65). நேற்று முன்தினம் இவர், தண்ணீர் பிடிப்பதற்காக வீட்டின் முன்பு இருந்த செங்குறிச்சி சாலையை கடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக சென்ற மோட்டார்சைக்கிள், சவடம்மாள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சவடம்மாள் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சவடம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com