ஊத்துக்கோட்டை அருகே வாகனம் மோதி தொழிலாளி பலி

ஊத்துக்கோட்டை அருகே வாகனம் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

ஊத்துக்கோட்டை:

விழுப்புரம் மாவட்டம் புத்தா முண்டகபட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வமூர்த்தி (வயது 30). கரும்பு வெட்டும் தொழிலாளி. இவர் ஊத்துக்கோட்டை அடுத்துள்ள ஆலங்காட்டில் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு ஊத்துக்கோட்டை வந்த அவர் அம்பேத்கர் நகர் பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து ஊத்துக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்வமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com