ஊத்தங்கரை அருகே டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி

ஊத்தங்கரை அருகே டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணம்
மரணம்
Published on

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள பாண்டவர் நகரை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 55). விவசாயி. இவர் நேற்று முன்தினம் வயலில் டிராக்டர் மூலம் உழவு பணியை மேற்கொண்டார். அப்போது வரப்பு பகுதியில் சென்ற போது நிலைதடுமாறி டிராக்டர் கவிழ்ந்தது. இதில் தவறி கீழே விழுந்த வெங்கடாசலம் டிராக்டரின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வெங்கடாசலத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com