உசிலம்பட்டி அருகே கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

உசிலம்பட்டி அருகே கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

உசிலம்பட்டி:

உசிலம்பட்டியில் இருந்து வத்தலக்குண்டு செல்லும் சாலையில் இடையபட்டி விலக்கு அருகே உத்தப்பநாயக்கனூர் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவா தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கஞ்சா கொண்டு வந்த ஜெயராமன்(வயது 28), வனராஜா (43) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

உசிலம்பட்டி கண்மாய்க்கரை அருகில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை மறித்து சோதனையிட்டபோது அவரிடம் அரை கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதைதொடர்ந்து மதுரை பேச்சியம்மன் படித்துறை சேர்ந்த பாலமுருகன்(44) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com