உசிலம்பட்டி அருகே தூக்குப்போட்டு ஆட்டோ டிரைவர் தற்கொலை

உசிலம்பட்டி அருகே தூக்குப்போட்டு ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

உசிலம்பட்டி:

உசிலம்பட்டி அருகே உள்ள கருக்கட்டான்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயபால் (வயது 48). ஆட்டோ டிரைவரான இவர் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததால் அவரது மனைவி கண்டித்துள்ளார். இதில் மன வேதனை அடைந்த அவர் தனது சொந்த தோட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com