புதுவகை வைரஸ் பரவல் - தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு பயணம் செய்ய தடை விதித்தது அமெரிக்கா

தென்னாப்பிரிக்காவில் புதுவகை உருமாறிய கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், அந்நாட்டில் இருந்துவரும் விமானங்களுக்கு பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன.
பயணம் செய்ய தடை
பயணம் செய்ய தடை
Published on

வாஷிங்டன்:

தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் ஐரோப்பாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

பி 1.1.529 என்ற புதிய வகை கொரோன வைரசில் ஸ்பைக் புரோட்டின் இருப்பதாக முதல்கட்ட ஆய்வில் தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், இந்த வைரசுக்கு ஏற்கனவே போடப்பட்டுள்ள தடுப்பூசிகளை செயல் இழக்கச் செய்யும் ஆற்றல் உள்ளதாக கூறியுள்ளனர்.

தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் அண்டை நாடுகளிலும் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக, தென்ஆப்பிரிக்க பிராந்தியத்தில் உள்ள 7 நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு உலக நாடுகள் ஒவ்வொன்றாக தடை விதித்து வருகின்றன.

இந்நிலையில், தென்ஆப்பிரிக்க பிராந்தியத்தில் உள்ள 7 நாடுகளுக்கு பயணம் செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளது.

ஏற்கனவே ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தென் ஆப்பிரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com