அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி இன்று டெல்லி வந்தடைந்தார்

அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரியாக பதவி ஏற்ற பின் ஆண்டனி பிளிங்கன் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல்முறை ஆகும்.
டெல்லி வந்தடைந்த ஆண்டனி பிளிங்கன்
டெல்லி வந்தடைந்த ஆண்டனி பிளிங்கன்
Published on

புதுடெல்லி:

அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் இன்று மாலை தலைநகர் டெல்லிக்கு விமானம் மூலம் வந்து சேர்ந்தார். அவர் இந்தியாவில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். 

இந்தப் பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியை ஆண்டனி பிளிங்கன் சந்தித்துப் பேசுகிறார். மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இந்த சந்திப்புகளின்போது இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 4 நாடுகள் அடங்கிய ‘குவாட்’ அமைப்பை வலுப்படுத்துவது குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் வர்த்தகம், முதலீடு, சுகாதாரம், கல்வி, மின்னணு, புதுமை கண்டுபிடிப்புகள், பாதுகாப்பு ஆகிய துறைகளில் இந்தியா-அமெரிக்கா இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பது பற்றியும் ராணுவத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் பேசப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com