உத்தரபிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த 4 பேர் பலி

சித்ரகூட் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சித்ரகூட்:

உத்தரபிரதேச மாநிலம் சித்ரகூட் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சிலர், நேற்று முன்தினம் கள்ளச்சாராயம் பருகினர். அவர்களில் உடல்நலம் பாதிக்கப்பட்ட 4 பேர் இறந்தனர். 3 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறிப்பிட்ட கிராமத்தில் மதுக்கடை ஏதும் இல்லாத நிலையில், சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு கடையில் இருந்து கள்ளச்சாராயத்தை வாங்கி வந்து குடித்துள்ளனர். அந்தக் கடைக்காரரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அலட்சியமாக செயல்பட்டதாக ஒரு எஸ்.ஐ., ஒரு காவலர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் நிலைய அதிகாரி ஒருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

X

Maalai Malar
www.maalaimalar.com