மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,17,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரகாஷ் ஜவடேகர்
பிரகாஷ் ஜவடேகர்
Published on

புதுடெல்லி:

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பின் புதிய அலை நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது.  கடந்த 2 நாட்களாக 2 லட்சத்திற்கும் கூடுதலான பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன.  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,17,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால், மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,42,91,917 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்புக்கு எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பல்வேறு துறையினரும் இலக்காகி வருகின்றனர்.  இந்த நிலையில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான மந்திரி பிரகாஷ் ஜவடேகருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், எனக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  கடந்த 2 முதல் 3 நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும்படி கேட்டு கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com