

துவரங்குறிச்சி:
வளநாடு அருகே உள்ள கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் சாமிக்கண்ணு (வயது 61). இவர் தனது தோட்டத்து வீட்டில் சுமார் 40 ஆடுகள் வளர்த்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென ஆடுகள் கத்தும் சத்தம் கேட்கவே, அவர் வெளியில் வந்தார். அப்போது 2 பேர் ஆடுகளை திருடி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஆடு திருடிய 2 பேரையும் கையும், களவுமாக பிடித்து வளநாடு போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர்கள், டி இடையப்பட்டியை சேர்ந்த மோகன் (22), வெள்ளியங்குடிபட்டியை சேர்ந்த கனகராஜ் (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ஆட்டை மீட்டதுடன், ஆடு திருட பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.