பேரளம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி இருந்த லாரியில், நெல் மூட்டைகள் திருடிய 2 பேர் கைது

பேரளம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி இருந்த லாரியில், நெல் மூட்டைகளை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

நன்னிலம்:

பேரளம் ரெயில் நிலையத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் திறந்த வெளியில் நெல் சேமிப்பு கிடங்குகளில் உள்ள நெல்லை லாரிகள் மூலம் எடுத்து வந்து, அரவைக்காக சரக்கு ரெயிலில் ஏற்றி பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்தநிலையில் நேற்று முன்தினம் ஒரு லாரியில் நெல் மூட்டைகள் ஏற்றியபடி பேரளம் ெரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இரவு காவலராக பணி புரியும் சுரேஷ் என்பவர், காலையில் வந்து பார்த்தபோது 3 நெல் மூட்டைகள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து சுரேஷ், பேரளம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டதில் பேரளத்தை அடுத்துள்ள திருமியச்சூர் கட்டளை தெருவை சேர்ந்த அருண் விக்னேஷ் (27), அதே ஊரை சேர்ந்த வினோத் (24) ஆகியோர் மூட்டைகளை திருடியது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அந்த 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 3 நெல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com