திருவலம் அருகே தேர்தல் தகராறில் இருதரப்பினர் மோதல்- 3 பேர் கைது

திருவலம் அருகே தேர்தல் தகராறில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலையடுத்து 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

திருவலம்:

வேலூர் மாவட்டம், திருவலம் அருகே உள்ள செம்பராயநல்லூர் பகுதியை சேர்ந்தவர் மதி என்கிற மதியழகன். அவரது மனைவி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் மதியழகனின் நண்பர் பாஸ்கரன் இவருக்கு தேர்தல் வேலை செய்யாமல் வேறு நபருக்கு ஆதரவாக வேலை செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மதியழகன், பாஸ்கரை கேட்டுள்ளார். அப்போது இருதரப்பினரும் தங்கள் ஆதரவாளர்களுடன் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

இது தொடர்பாக இருதரப்பினரும் தனித்தனியாக திருவலம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இருதரப்பையும் சேர்ந்த பாஸ்கரன், மதியழகன், சரத்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com