தூத்துக்குடியில் பால் வியாபாரியிடம் செல்போன் பறிப்பு- 2 பேர் கைது

தூத்துக்குடியில் பால் வியாபாரியிடம் செல்போன் பறித்து சென்ற சம்பவம் தொடர்பாக 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை மீட்டனர்.
கைது
கைது
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி அருகே உள்ள கூட்டாம்புளி மைக்கண்நகரை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 39). பால் வியாபாரியான இவர் கடந்த 3-ந் தேதி ஜோதி நகர் விலக்கு பகுதியில் நின்று கொண்டு இருந்தார். அப்போது, தூத்துக்குடி முருகேசன்நகரை சேர்ந்த நாகராஜன் மகன் கார்த்திக் (23), எப்போதும் வென்றான் வடக்கு தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் ஆனந்தகுமார் (19) ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் திடீரென மாரிமுத்துவை மிரட்டி, அவர் வைத்து இருந்த செல்போன் மற்றும் ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து, கார்த்திக், ஆனந்தகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை போலீசார் மீட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com