திருப்பூரில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது

திருப்பூரில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கைதான ஜீவா, சுரேந்திரன்
கைதான ஜீவா, சுரேந்திரன்
Published on

நல்லூர்:

திருப்பூர் ஊரக போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. அது பற்றி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் ஊரக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜு மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோவில்வழி அருகே தாராபுரம் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினார். இதில் அவர் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது என தெரியவந்தது. மேலும் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் தாராபுரம் ரோடு கோவில்வழி பகுதியில் பெருமாள் கோவில் அருகில் வசித்து வரும் ஜீவா (வயது 32) என்பதும், சந்திராபுரம் இந்திராநகர் பகுதியை சேர்ந்த சுரேந்திரன் (38) , என்பவருடன் சேர்ந்து 2 மாதங்களுக்கு முன்பு அந்த மோட்டார் சைக்கிளை திருடி விற்பனைக்காக கொண்டு சென்றது தெரியவந்தது. 

இதைடுத்து அவர்கள் இருவரையும் ஊரக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com