நல்லம்பள்ளியில் ஆன்லைனில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

நல்லம்பள்ளியில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளியில் பஸ் நிறுத்தம் அருகே தடை செய்யப்பட்ட ஆன் லைன் மூலம் லாட்டரி சீட்டுகள் விற்றதாக, அதியமான்கோட்டை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. 

இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், தர்மபுரி நெல்லிநகரை சேர்ந்த ராஜேஷ்கண்ணா (வயது 41) மற்றும் நெடுமாறன் நகரைச் சேர்ந்த பூபதி (23) ஆகிய 2 பேர் கடை ஒன்றில் ஆன்லைனில் லாட்டரி சீட்டுகள் விற்றது தெரிய வந்தது. 

இதையடுத்து அவர்கள் இருவரையும் அதியமான்கோட்டை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து ரொக்கம் ரூ.1,300-ஐ பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com