அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேர் கைது

மாவட்ட நிர்வாகம் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பதை வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, போலீசார் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.
கைது
கைது
Published on

விருதுநகர்:

விருதுநகர் அருகே ஆனைக்குட்டத்தில் அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்ததாக ஆமத்தூர் கிராம நிர்வாக அதிகாரி சாந்தி கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு முதலிப்பட்டியை சேர்ந்த தர்மலிங்கம் (வயது 50), சின்னதுரை (38) உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதில் தர்மலிங்கம், சின்னத்துரை ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மற்ற 2 பேரை தேடி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பதை வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, போலீசார் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்திய நிலையில் ஆமத்தூர் போலீசார் அவர்களது விசாரணை எல்லைப்பகுதியில் உள்ள ஆனைக்கட்டத்தில் பட்டாசு தயாரிப்பு அனுமதி இல்லாமல் நடைபெற்று வருவதை போலீசார் கண்காணிக்காத நிலையில், வருவாய்த்துறை அதிகாரிகள் தகவல் அறிந்து சோதனை நடத்தி போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com