கடலூரில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த 2 பேர் கைது

கடலூரில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

கடலூர்:

கடலூர் பாதிரிக்குப்பத்தில் 2 வாலிபர்கள் தங்கள் வீடுகளில் கஞ்சா செடி வளர்ப்பதாக திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் நேற்று பாதிரிக்குப்பம் ஸ்ரீரங்கத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஸ்ரீரங்கன் மகன் விக்னேஸ்வரன் (வயது 28), பக்கத்து வீட்டை சேர்ந்த கலியன் மகன் ராமச்சந்திரன் (20) ஆகிய 2 பேர் வீடுகளிலும் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அவர்கள் 2 பேரும் தங்கள் வீடுகளில் புளிச்ச கீரை வைத்துள்ளதாக அக்கம், பக்கத்தினரை நம்ப வைத்து, கஞ்சா செடியை வளர்த்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த கஞ்சா செடிகளை அழித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com