வருகிற 15-ந் தேதி முதல் நடைபெற இருந்த லாரி உரிமையாளர்கள் போராட்டம் ஒத்தி வைப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளனர்.
லாரிகள்
லாரிகள்
Published on

சேலம்:

டீசல் விலை உயர்வால் அத்தியாசிய பொருட்கள் விலை நாளுக்கு, நாள் உயர்ந்து வருகிறது. இதனால் டீசல் விலையை குறைக்க வேண்டும், 15 ஆண்டுகளுக்கு மேலான லாரிகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளனர்.

இந்த நிலையில் வருகிற 15-ந் தேதி முதல் தென்மண்டல லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர். இதற்கிடையே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் லாரி ஸ்டிரைக்கை தள்ளி வைப்பது தொடர்பாக தென்மண்டல லாரி உரிமையாளர்கள் சங்க பொது செயலாளர் சண்முகப்பா தலைமையில் பெங்களூருவில் ஆலோசனை நடத்தினர். இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் லாரி உரிமையாளர்கள் தங்களது கோரிக்கைகளை அரசுக்கு தொடர்ந்து வற்புறுத்துவது என்றும், தென் மண்டலத்திற்கு உட்பட்ட தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியில் சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ளதால வாக்கு எண்ணிக்கை நாளான மே மாதம் 2- ந் தேதிக்கு பிறகு மீண்டும் ஆலோசனை நடத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. இதனால் வருகிற 15-ந் தேதி முதல் நடைபெற இருந்த லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற போராட்டம் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com