மின்சாரம் தாக்கி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் பலி

மின்சாரம் தாக்கி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி பலி
மின்சாரம் தாக்கி பலி
Published on

சென்னை:

சென்னை திருவல்லிக்கேணி சிவராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் தனசேகர் (வயது 30). இவர் பெருநகர சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார்.இந்த நிலையில் நேற்று மாலை இவரது வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அவர் மின் பெட்டியில் உள்ள ‘பியுஸ் கேரியரை’ சரி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை அப்பகுதியினர் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து மெரினா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com