திருச்சி அருகே கஞ்சா விற்ற பெண் கைது

திருச்சி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

கே.கே.நகர்:

திருச்சி சின்ன கொத்தமங்கலம் மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கரின் மனைவி அலமேலு (வயது 41) என்பதும், அவர் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. உடனே அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com