திருச்சி அருகே வாலிபர்களிடம் பணம் பறித்த 3 பேர் கைது

திருச்சி அருகே வாலிபர்களிடம் பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

திருச்சி:

திருச்சி சிந்தாமணி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 31). இவர் நேற்று முன்தினம் தேவதானம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500-ஐ பறித்துச் சென்றனர். இதுகுறித்து கோட்டை போலீசில் கார்த்திக் கொடுத்த புகாரின் பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசாமி வழக்குப்பதிவு செய்து திருச்சி சிந்தாமணியை சேர்ந்த மகேஸ்வரன்(21), குமரவேல் (19) ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தார். இதேபோல, திருச்சி டவுன் ஸ்டேஷன் பகுதியிலுள்ள பாரதியார் தெருவைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் தங்கராஜ் (28) என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக பிரிஸ்டன் பத்ரி தெருவைச் சேர்ந்த முகில்குமாரை கோட்டை போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com