பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை - கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு

திருச்சி அருகே பெண்ணுக்கு வரதட்சணை கொடுமைபடுத்திய கணவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருச்சி:

திருச்சி-புதுக்கோட்டை மெயின் ரோடு ஜெயில் கார்னர் பகுதியை சேர்ந்தவர் துர்காதேவி (வயது 33). இவருக்கு ராஜசேகரன் (40) என்பவருடன் கடந்த 15-11-2015 அன்று திருமணம் நடைபெற்றது. அப்போது துர்காதேவி வரதட்சணையாக 20 பவுன் நகை, ரூ. 3 லட்சம் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கொடுத்துள்ளார். 

ஆனாலும் ராஜசேகரன் மற்றும் அவரது உறவினர்கள் மீண்டும் நகை, பணம் கேட்டு துர்காதேவியை மனரீதியாக துன்புறுத்தி வந்தனர். இதனால் மனவேதனை அடைந்த துர்காதேவி திருச்சி மாநகர போலீஸ் கமி‌‌ஷனர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் மனு கொடுத்தார். 

அதன்பேரில் ராஜேசேகரன் உள்பட 5 பேர் மீது திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இந்திரா காந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com