திருச்சி அருகே கஞ்சா -லாட்டரி சீட்டு விற்றவர்கள் கைது

திருச்சி அருகே கஞ்சா மற்றும் லாட்டரி சீட்டு விற்றவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருச்சி:

திருச்சி காமராஜர் நகர் என்.எஸ்.பி. பள்ளிவாசல் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அரியமங்கலம் ஈ.வி.ஆர். தெருவை சேர்ந்த கணேசன் (வயது 18) என்பவரை அரியமங்கலம் போலீசார் கைது செய்தனர். இதேபோல் கல்லுக்குழி ராமகிருஷ்ணா நகர் அருகே லாட்டரி சீட்டுகள் விற்றுக் கொண்டிருந்த கல்லுக்குழி சுப்ராய தெருவைச் சேர்ந்த மணிக்குமார் (32) என்பவரை கண்டோன்மெண்ட் போலீசார் கைது செய்தனர். இதேபோல் திருச்சி உறையூர் வாத்துகார தெருவில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (40) என்பவரை உறையூர் போலீசார் கைது செய்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் திருச்சி இ.பி.ரோடு பகுதியில் சிறு, சிறு பொட்டலங்களாக கஞ்சா விற்ற அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த விஜய் (23) என்பவரை கோட்டை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த 150 கிராம் கஞ்சா மற்றும் ரூ.120-ஐ பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com