சத்திரம் பஸ் நிலையத்தில் வேன் கவிழ்ந்ததால் பரபரப்பு

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் வளைவில் வேன் திரும்பியபோது கவிழ்ந்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கவிழ்ந்து கிடக்கும் வேனை படத்தில் காணலாம்.
கவிழ்ந்து கிடக்கும் வேனை படத்தில் காணலாம்.
Published on

மலைக்கோட்டை:

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் நேற்று ஒரு வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது, அந்த வேன் அங்குள்ள வளைவில் திரும்பிய போது பெண்கள் குறுக்கே வந்ததால் டிரைவர் திடீரென பிரேக் பிடித்தார். இதனால் வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. 

இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து அப்பகுதியினர் வேனில் இருந்த சரக்குகளை உடனடியாக அப்புறப்படுத்தி விட்டு வேனை மீட்டு அந்த பகுதியில் இருந்து அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் நேற்று சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com