திருவாரூர் அருகே திருநங்கை தூக்குப்போட்டு தற்கொலை

திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநங்கை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

திருவாரூர்:

திருவாரூர் அருகே கள்ளிக்குடி பகுதியை சேர்ந்தவர் வின்சிகா (வயது 28). திருநங்கை. இவர் தனது சக திருநங்கைகளுடன் திருவாரூர் அருகே மாங்குடியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

காலை வின்சிகா, ஆண்டிரியா என்பவரும் சேர்ந்து திருவாரூர் வந்துள்ளனர். புதிய பஸ் நிலையத்தில் இருவருக்கும் இடையே மன வருத்தம் ஏற்பட்டு வாக்குவாதம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாதியிலே வின்சிகா வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் மாலை ஆண்டிரியா வீட்டிற்கு வந்து பார்த்தபோது வின்சிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவல் அறிந்த திருவாரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவரின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து வின்சிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com