வாணியம்பாடி அருகே ரெயிலில் அடிபட்டு கட்டிட தொழிலாளி பலி

வாணியம்பாடி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற கட்டிட தொழிலாளி ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

ஜோலார்பேட்டை:

ஆம்பூர் அருகே ஸ்ரீராமபுரம் பகுதி 3-வது தெருவைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 46), கட்டிட தொழிலாளி. இவருக்கு சாந்தி என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். ஜெய்சங்கர் நேற்று காலை வாணியம்பாடி பகுதியில் கட்டிட வேலைக்காக சென்றார் வாணியம்பாடி ரெயில் நிலையம் அருகே யார்டில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற ஒரு ரெயிலில் அடிபட்டு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முரளிமனோகரன் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com