ரெயில் மோதி முதியவர் பலி

விழுப்புரம் அருகே அய்யூர்அகரம் பாலத்தின் கீழ் பகுதியில் நேற்று 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார்.
தண்டவாளம்
தண்டவாளம்
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே அய்யூர்அகரம் பாலத்தின் கீழ் பகுதியில் நேற்று 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்நாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி இறந்திருப்பது தெரியவந்தது. மேலும் இவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com