கன்னியாகுமரி கடற்கரையில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்ததை காணலாம்
கன்னியாகுமரி கடற்கரையில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்ததை காணலாம்

வார நாட்களிலும் கன்னியாகுமரியில் குவியும் சுற்றுலா பயணிகள்

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் படகில் சென்று பார்த்து வந்தனர்.
Published on

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை படகில் சென்று மிகவும் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கொரோனா 2-வது அலை சுற்று வேகமாக பரவ தொடங்கியதை அடுத்து மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அதன்படி சுற்றுலாத் தலங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் மக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இதைதொடர்ந்து கன்னியாகுமரி கடற்கரை பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு வாரத்தின் கடைசி விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்ற நாட்களில் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. அதேசமயம் விடுமுறை இல்லாத வாரத்தின் மற்ற அனைத்து நாட்களிலும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க தொடங்கியது. நேற்று வியாழக்கிழமை என்றாலும் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணமாக இருந்தனர்.

கன்னியாகுமரி கடற்கரை பகுதி களை கட்டியது. அதேபோல கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் படகில் சென்று பார்த்து வந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com