தண்டையார்பேட்டை அருகே வீட்டில் கஞ்சா பதுக்கி விற்ற பெண் கைது

தண்டையார்பேட்டை அருகே வீட்டில் கஞ்சா பதுக்கி விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

பெரம்பூர்:

சென்னை தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியில் வீட்டில் பதுக்கி கஞ்சா விற்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. அதன்பேரில் ஆர்.கே.நகர் போலீசார் அந்த பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்குள்ள லட்சுமி (வயது 40) என்பவரது வீட்டில் நடத்திய சோதனையில் அவர் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பது தெரிந்தது.

விசாரணையில் அவர், ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து வீட்டில் பதுக்கி சிறுசிறு பொட்டலங்களாக போட்டு வடசென்னை பகுதிகளில் விற்றது தெரிந்தது.

லட்சுமியை கைது செய்த போலீசார், அவரது வீட்டில் பதுக்கிய 1 கிலோ 500 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com