விலை வீழ்ச்சி காரணமாக சாலையோரம் கொட்டப்பட்ட தக்காளி

நடவு, களை எடுத்தல், அறுவடை செய்தல் போன்றவற்றிற்கு கட்டுப்படியாகாததால் பறித்த தக்காளிப்பழங்களை டன் கணக்கில் சாலையோரத்தில் விவசாயிகள் கொட்டி வருகின்றனர்.
சாலையோரம் கொட்டப்பட்டுள்ள தக்காளி
சாலையோரம் கொட்டப்பட்டுள்ள தக்காளி
Published on

ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாலுகா, அம்பிளிக்கை, தங்கச்சியம்மாபட்டி, கள்ளிமந்தையம், கொசவபட்டி, பெரிய கோட்டை உள்பட பல்வேறு கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் தக்காளி நடவு செய்துள்ளனர்.

கடந்த வாரங்களில் திருமணங்கள் உள்ளிட்ட பல்வேறு விசே‌ஷங்கள் நடைபெற்றன. இதன் காரணமாக தக்காளி விலை உயர்வடையும் என விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் தக்காளிக்கு எதிர்பார்த்த அளவு விலை கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

நடவு, களை எடுத்தல், அறுவடை செய்தல் போன்றவற்றிற்கு கட்டுப்படியாகாததால் பறித்த தக்காளிப்பழங்களை டன் கணக்கில் சாலையோரத்தில் விவசாயிகள் கொட்டி வருகின்றனர். ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் 14 கிலோ எடையுள்ள ஒரு பெட்டி தக்காளி ரூ.120 க்கு மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. எனவே இப்பகுதியில் தக்காளியை பதப்படுத்தி அதனை வெளியூர்களுக்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com