விழுப்புரம் அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

விழுப்புரம் அருகே புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் மகாவி‌‌ஷ்ணு தெருவில் உள்ள பெட்டிக்கடைகளில் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மருது தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர். 

அப்போது அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த சந்திரன் (வயது 55) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com