கொல்லங்கோடு அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

கொல்லங்கோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் நடைக்காவு பகுதியில் ரோந்து சென்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

கொல்லங்கோடு:

கொல்லங்கோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் நடைக்காவு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அந்த பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் திடீர் சோதனை செய்தனர். அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து கடையில் இருந்து 18 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கடையின் உரிமையாளரான நித்திரவிளையை சேர்ந்த உதயகுமார் (வயது 39) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com