ஒரு குவிண்டால் சன்ன ரக நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு- வேளாண் அமைச்சர்

வேளாண்மை துறையில் இயற்கை வேளாண்மைக்கு என தனிப்பிரிவு உருவாக்கப்படும் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்
Published on

தமிழக வரலாற்றில் முதல்முறையாக வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து  பேசியதாவது:-

* தமிழகத்தில் நிகர சாகுபடி பரப்பான 60 விழுக்காடு என்பதை 75 விழுக்காடாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* 10 லட்சம் ஹெக்டேர் இருபோக சாகுபடி பரப்பினை அடுத்த 10 ஆண்டுகளுக்குள் 20 லட்சம் ஹெக்டேரோக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் வேளாண் வருவாயை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* சிறுகுறு விவசாயிகளை ஒருங்கிணைந்து கூட்டுப்பண்ணை முறை ஊக்குவிக்கப்படும்.

* சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசன முறைகள் விரிவுபடுத்தப்படும்.

* பணப்பயிர் வேளாண் ஆக்கத்திறனில் முதல் மூன்று இடங்களுக்குள் தமிழகம் இடம்பிடிக்கும்.

* தமிழ்நாட்டில் 19.31 லட்சம் ஹெக்டேர் தரிசு நிலம் இருப்பது கண்றியப்பட்டுள்ளது.

* முதலமைச்சர் மானாவாரி நில மேம்பாடு இயக்கத்திற்கு ரூ.146.64 கோடி நிதி ஒதுக்கீடு.

* வேளாண்மை துறையில் இயற்கை வேளாண்மைக்கு என தனிப்பிரிவு உருவாக்கப்படும்.

* இயற்கை வேளாண்மை வளர்ச்சி திட்டம் நடப்பாண்டு முதல் செயல்படுத்தப்படும்.

* தோட்டக்கலைத்துறையின் மூலம் தோட்டக்கலை நடவுப்பொருட்கள் உற்பத்தி மேற்கொள்ளப்படும்.

* தோட்டக்கலை நடவுப்பொருட்கள் உற்பத்தி ரூ.21.8 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

X

Maalai Malar
www.maalaimalar.com