தமிழக சட்டசபை தேர்தல் எப்போது?- தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம்

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் எப்போது நடத்தப்படும் என டெல்லி சென்ற பிறகு அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறினார்.
தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா
தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா
Published on

சென்னை:

தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக 2 நாட்கள் அரசியல் கட்சிகள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* சுங்க இலாகா அதிகாரிகளின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

* வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

* வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்தது தொடர்பாக தகவல்கள் அடுத்த 24 மணி நேரத்தில் வெளியிடப்படும்.

* தமிழகத்தில் சட்டசபை தேர்தல் எப்போது நடத்தப்படும் என டெல்லி சென்ற பிறகு அறிவிக்கப்படும்.

* தமிழக சட்டசபை தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலும் நடத்தப்படும்.

* ஆர்.கே.நகர், வேலூர் இடைத்தேர்தல் போன்று சட்டசபை தேர்தல் இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com