திருவண்ணாமலையில் பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு

திருவண்ணாமலையில் பெண்ணிடம் 7 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நகை பறிப்பு
நகை பறிப்பு
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை வானவில் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் குமரன். அவரது மனைவி அபிராமி (வயது 36). இவர் நேற்று முன்தினம் திருக்கோவிலூருக்கு உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு இரவு சுமார் 10 மணியளவில் திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்திற்கு வந்தார். பின்னர் அவர் தனது கணவருடன் 10.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் தென்றல் நகர் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகம் வழியாக சென்று உள்ளார்.

அப்போது அந்த வழியாக எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென அபிராமி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதினர்.

பின்னர் அவர்கள் அபிராமியின் கழுத்தி இருந்த 7 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்று விட்டனர்.

அவர் திருடன், திருடன் என்று அலறினார். அக்கம்பக்கத்தினர் இது குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டு இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 2 மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com